நாமலின் கூட்டத்தில் மதுபோதையால் நேர்ந்த அசம்பாவிதங்கள்
ஜனாதிபதி அநுரவின் கிராமமான தம்புத்தேகம நகரில் நாமல் ராஜபக்ஷ ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் குடிபோதையில் கட்சி உறுப்பினர்கள் சுற்றித் திரிந்ததால் பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளிம்பியுள்ளது.
வீதியில் குடிபோதையில் சிலர் விழுந்து கிடப்பதையும் மக்கள் அவதானித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த வருடம் நவம்பரில் நுகேகொடை மற்றும் நேற்று (07.01.2026) தம்புத்தேகமவில் நடைபெற்ற பேரணியில் அதிக அளவில் மதுபானம் விநியோகிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
அந்தக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்ட ஏழை மக்கள் குடிபோதையில் கைவிடப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

இவ்வாறு மக்களைப் பயன்படுத்துவதற்கும் கைவிடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பல எதிர்ப்பு கருத்துக்கள் சமூகத்தில் வலுவடைந்துள்ளன.
அத்தோடு நாமல் ராஜபக்ச எம்.பி மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மேடைக்கு அருகில் போதையில் சிலர் அதை திரும்ப உச்சரிப்பதான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam