ஊழலுக்கு இடமளிக்காத காரணத்தினால் தொடருந்து பொதுமுகாமையாளர் பதவி பறிப்பு
இலங்கை தொடருந்து திணைக்களத்தில் ஊழலுக்கு இடமளிக்காத காரணத்தினாலேயே அதன் பொதுமுகாமையாளர் நீக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரமுகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தரவை பதவி நீக்குவது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
சட்டரீதியற்ற தன்மை
எனினும் தொடருந்து திணைக்களத்தில் முன்னெடுக்கப்படவிருந்த ஊழல் செயற்பாடொன்றுக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினாலேயே அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தற்போது தொடருந்து திணைக்கள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன் மூலம் வருடமொன்றுக்கு 14 மில்லியன் வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அதன் சட்டரீதியற்ற தன்மை காரணமாக தொடருந்து திணைக்களத்தின் பொதுமுகாமையாளராக இருந்த தம்மிக்க ஜயசுந்தர, அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு அனுமதி வழங்க மறுப்புத் தெரிவித்திருந்தார்.
அதன் காரணமாகவே அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரமுகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 10 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
