கொழும்பு கோட்டை- மாலபே இடையிலான இலகு தொடருந்து திட்டம்!
கொழும்பு கோட்டை- மாலபே இடையிலான இலகு தொடருந்து திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கான மாற்றுப் பிரேரணைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியைத் தணிக்கும் வகையில் இந்த இலகு தொடருந்து திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது. எனினும் கடந்த கோட்டாபய அரசாங்கம் அதனை இடைநிறுத்தியிருந்தது.

பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் கொழும்பு-மாலபே இடையே பயணிக்கும் நிலையில் உத்தேச தொடருந்து போக்குரவத்தின் ஊடாக அவர்களுக்குப் பணம் மற்றும் நேரத்தைச் சேமித்துக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri