தொடருந்து ஆசன முன்பதிவு: பணம் மீள செலுத்தல் தொடர்பில் வெளியான தகவல்
'டித்வா' சூறாவளி பாதிப்பால் தொடருந்து முன்பதிவுகளில் ரூ.45 மில்லியனுக்கும் அதிகமான தொகை நேற்று (23.12.2025) மாலைக்குள் மீள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்து பாதைகள் பாதிக்கப்பட்டதால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூ.150 மில்லியன் ரூபாவாகும்.
தொடருந்து நிலைய அதிபர்களின் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,
முன்பதிவு பணம் மீளளிக்கும் செயன்முறை
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களில் இருந்து மட்டுமல்ல, நாடு முழுவதுமுள்ள வேறு பல தொடருந்து நிலையங்களில் செய்யப்பட்ட முன்பதிவு பணமும் மீள செலுத்தப்படும்.
மலையகப் பகுதிகளுக்கே அதிக எண்ணிக்கையிலான முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மட்டும் 39,458,175 ரூபா மீள் செலுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து ரூ.6,170,375 திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, தொடருந்து முன்பதிவுகள் ஒரு மாதத்திற்கு முன்பே செய்யப்படுகின்றன.

அதன்படி, கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 27 ஆம் திகதி வரை செய்யப்பட்ட முன்பதிவுகள் மூலம் ரயில்வே துறைக்கு ரூ. 150 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.
பணம் மீளளிக்கும் செயல்முறை டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமானது. பணத்தைத் திரும்பப் பெற, டிக்கெட்டையும், முன்பதிவு செய்த பயணியின் தேசிய அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட்டின் நகலை தொடருந்து நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam