வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை: கைப்பற்றப்பட்ட காலாவதியான உணவு பொருட்கள்
முல்லைத்தீவு- உடையார்கட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் இன்றையதினம் (3) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது, காலாவதியான உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கை
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் புதுக்குடியிருப்பு குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரதன், மற்றும் விசுவமடு சுகாதார பரிசோதகர் சந்திரமோகன், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஷ், வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொஜிஷ்ரன், கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri