போதைப்பொருளை கட்டுப்படுத்த மோப்ப நாயின் துணையுடன் பொலிஸார் விசேட சோதனை (Video)
வவுனியா - நெளுக்குளம் பொலிஸார் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா, நெளுக்குளம் சந்திப்பகுதியில் இன்று (04.11.2022) காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
போதைப்பொருள் பாவனை மற்றும் பரிமாற்றம்
அண்மைக்காலமாக வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் பரிமாற்றம் என்பன அதிகரித்துள்ளதுடன், வவுனியாவிலும் போதைப்பாவனை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை என்பவற்றை
கட்டுப்படுத்தும் வகையில் நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாயின் துணையுடன்
வீதியால் சென்ற பேருந்துகள், சொகுசு வாகனங்கள் என்பவற்றை மறித்து
சோதனையிட்டதுடன், சந்தேகத்திற்கிடமான இடங்கள் மற்றும் நபர்களையும் சோதனை செய்தனர்.














16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 19 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
