அமெரிக்காவில் இலங்கையர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல்!
அமெரிக்காவில் கடந்த வாரம் Manhattan ரயிலில் வந்த 68 வயதான நாராயங்கே போதி என்ற இலங்கை நபரை தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதான மார்க் மாத்தியூ, கடந்த வெள்ளிக்கிழமை மன்ஹாட்டனின் பிராங்க்ளின் ரயில் நிலையத்தில் நாராயங்கே போதி மீது தலையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.
“திடீரென்று, பையன் ஒரு முதியவரின் மேல் தாக்குதல் நடத்த தொடங்கினார். தலைக்கு மேல் அடித்தான். பின்னர் அவருக்கு இரத்தம் வந்தது” என நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூயோர்க் நகரில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு, இதுபோன்ற 28 இனரீதியான தாக்குதல்கள் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri