சமஸ்டி அடிப்படையில் புதிய அரசியலமைப்பு வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் (video)
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தொடருமாக இருந்தால் இந்தியாவின் தலைமை மேற்பார்வையின் கீழ் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் மேற்பார்வை இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்தில் நேற்றுமுன் தினம் (12.12.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ஒரு மாதத்திற்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அறிவிந்திருந்தார்.
நில அபகரிப்பு
நாங்கள் ஏற்கனவே 5 கட்சிகள் சம்மந்தன் தலைமையில் கூடி சில தீர்மானங்களை எடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தோம்.
இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எங்களது கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்தோம். அதில் முதலாவது நில அபகரிப்பு நடந்து கொண்டிருகின்றது.
அதனை உடனடியாக நிறுத்தி ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், அதிகார பகிர்வு தொடர்பில் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என இரண்டாவதாகவும், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்த வடக்கு, கிழக்கு பகுதியில் சமஸ்டி அடிப்படையில் அதிஉச்ச அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படப்பட வேண்டும்.
இந்த ஒழுங்கு முறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதை நாங்கள் விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
