கொழும்பில் மருத்துவ பீட மாணவி கொலை தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் (Photo)
கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவரை இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட மாணவி கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அவரது காதலன் என கூறப்படுவதுடன், கலை பீடத்தின் மாணவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் பின்னர் அவரது காதலன் என கூறப்படும் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
அத்துடன் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரின் விவரங்கள் இன்னும் கண்டறியப்படாத நிலையில், குறித்த மாணவி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று குற்றம் இடம்பெற்ற இடத்தில் இடம்பெறவுள்ளது.