இந்தியா தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டும்: இரா. சம்பந்தன் வேண்டுகோள்
இலங்கையில்
தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு விரைந்து கிடைக்க நரேந்திர மோடி
தலைமையிலான இந்திய அரசு, இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க
வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.
'மலையகம் - 200' நிகழ்வில் பங்கேற்க கொழும்பு வந்த இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வடக்கு - கிழக்குக்கும் வந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ள நிலையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் தீர்வு
இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் நலனில் இந்திய மத்திய அரசு முழுமையான அக்கறை செலுத்தியுள்ளது. உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதனை நாம் வரவேற்கின்றோம்.
அரசியல் தீர்வு விவகாரத்தில் ராஜபக்ச அரசு போல் ரணில் அரசும் வாக்குறுதிகளை மாத்திரம் வழங்குகின்றது. ஆனால், செயல் வடிவில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும்.
தமிழர்களின் கோரிக்கைகள் என்ன, அவர்கள் விரும்பம் தீர்வு என்ன ஆகிய விடயங்களை இந்தியாவின் மோடி அரசிடம் நாம் ஏற்கனவே எடுத்துரைத்து விட்டோம்.
எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் மோடி அரசு, இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
