அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் மோடி : திராவிட முன்னேற்றக்கழக பொருளாளர் குற்றச்சாட்டு
தாம் பிரதமர் என்பதையே மறந்து, மோடி அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் என திராவிட முன்னேற்றக்கழக பொருளாளர் டி.ஆர்.பாலு குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியா - திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாட்டுக்கு சென்றிருந்த பிரதமர் மோடி,தூத்துக்குடியில் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு, நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
மோடியின் குற்றச்சாட்டு
இதன்போது, "மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது.இந்தநிலையில், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகும் என மோடி குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் முகமாக திராவிட முன்னேற்றக்கழக பொருளாளர் டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ் நாட்டுக்கான ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் ஒரு செங்கல் வைக்கப்பட்டது.
ஆனால் மறு செங்கல் இதுவரை வைக்கப்படவில்லை. எனவே 2024 மே மாதத்துக்குப் பிறகு பதவியேற்கும் புதிய பிரதமர் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டப் போகிறார்.வீட்டில் இருந்தபடி மோடி அதனைப் பார்க்கப் போகிறார்" கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
