பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகும் ஆசிரியர் சங்கம்: பாடசாலை விடுமுறை தொடர்பில் கேள்வி
இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள நிலையில் அந்நாளுக்கான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கண்டனப் போராட்டம்
தொழிற்சங்க நடவடிக்கைக்கு சமாந்தரமாக நாளையத்தினம் கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையியல் இலங்கை ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் நாட்களில் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
