ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
ஐக்கிய இராச்சியத்திற்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் தவறான தகவல்கள் வெளியிடப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஊடகங்களும் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவதானிக்கப்படுகிறது.

சொந்த செலவில் பிரித்தானியா சென்ற ஜனாதிபதியின் மனைவி
இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் ஆகியோர் மட்டுமே உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வைத்தியரும் இந்த குழுவில் இணைந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இதில் ஜனாதிபதியின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க தனது சொந்த செலவில் இணைந்து கொண்டார்.
இதனிடையே, ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (19) நடைபெற்ற புலம்பெயர் இலங்கையர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவும் இணைந்துகொண்டதாக மேலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri