யாழ் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தின் போது QR முறைமை
யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தின் போது QR முறைமையை பின்பற்ற வட மாகாண அதிபர் சங்கம் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வட மாகாண அதிபர் சங்கத்தினர் நேற்றைய தினம்(4.3.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை கடிதத்தினை கையளித்தார்கள்.
தற்போது நமது பகுதிகளில் எரிபொருள் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் நீண்ட வரிசைகள் மற்றும் ஒழுங்கின்மை ஆகியவை பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், எரிபொருள் பெறுவதற்கு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
QR முறைமை
அதிபர்கள் ஆசிரியர்கள் தங்கள் கடமையை சிறப்பாக நிறைவேற்ற முடியாமல் காணப்படுவதாகவும், எனவே சிறப்பாக கடமைகளை செய்வதற்கு எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து தேவைக்கேற்ப நியாய முறையில் பகிர்ந்தளிக்க QR நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரியிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், QR நடைமுறையினை பின்பற்றுவது தொடர்பாக வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு தம்மால் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதாகவும், நேற்றைதினம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 36 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் (Ceypetco) பெற்றோல் விநியோகிக்க தாம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் பொதுமக்களின் வரிசை குறையும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam