நாமல் தொடர்பில் கட்டார் நிறுவனம் வெளியிட்ட தகவல்-செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒப்பந்தத்தை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கட்டாரின் டோஹாவை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளதாக முன்வைக்கப்படும் கருத்துக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.
இது தொடர்பில் ஏ.எல்.பி.ஜி என்ற குறித்த வர்த்தக நிறுவனம், அதன் மனித வளப் பணிப்பாளர் காயத்ரி ரங்கநாதன் ஊடாக தெளிவுபடுத்தல் கடிதமொன்றை வழங்கியுள்ளது.
இலங்கையை பாரதூரமான எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கி, நாமல் ராஜபக்ச நிதிப்பணிப்பாளராக பதவி வகிக்கும் ALBG என்ற நிறுவனத்தினூடாக இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒப்பந்தத்தை வழங்கும் மோசடியான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
கட்டார் நாட்டின் வர்த்தகர்கள், மற்றும் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துரையாடும் புகைப்படங்கள் குறித்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த போதிலும் பின்னர் அவை நீக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,