கொடூரத்தின் உச்சத்தை நோக்கி நகரும் ரஷ்ய - உக்ரேனிய போர்.. வெளியான திகிலூட்டும் தகவல்
ரஷ்ய போர் வீரர்கள், பட்டினியால் நரமாமிசத்தை நாடும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் போரிட்டு வரும் ரஷ்ய வீரர்களின் உரையாடல்களை உக்ரேனியப் படைகள் இடைமறித்த நிலையிலேயே குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விளாடிமிர் புடினின் சட்டவிரோதப் படையெடுப்பை முன்னெடுத்து வரும் ரஷ்ய வீரர்கள், போர்க்களத்தில் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், தொடர்ச்சியான உணவுப் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நரமாமிசம்
அது மாத்திரமன்றி, எரிவாயு சிலிண்டர்கள், இறைச்சி, தானியங்கள் மற்றும் சிகரெட்டுகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவுகளை வீரர்கள் தாங்களாகவே ஏற்றுக்கொள்ளும் நிலை இருப்பதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் உக்ரேனிய உளவுத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், உக்ரைனின் சபோரிஜியா பிராந்தியத்தில் படையெடுத்துள்ள வீரர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் தற்போது நரமாமிசம் உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றே உக்ரைனின் GUR இராணுவ உளவு அமைப்பு உறுதி செய்துள்ளது.

கடுமையான உணவுப் பற்றாக்குறையால், ரஷ்ய வீரர்கள் தங்கள் இளைய வீரர்களின் சடலங்களை சாப்பிடத் தயாராகி வருகின்றனர் என்றே அந்த உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பதற்றத்தையும் அதிகரித்து வருகின்றது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam