உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை : விளாடிமிர் புடின் வெளியிட்ட அறிவிப்பு
காசா மீதான இஸ்ரேல் தாக்குதலையும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையையும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வேறுபடுத்தியுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், காசா மீதான இஸ்ரேல் தாக்குதலையும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையையும் புடின் செய்தியாளர் சந்திப்பில் விளக்கியுள்ளார்.
இந்த நிலையில் ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் புடின் மேலும் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 1,500 பேர் இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். புதன்கிழமை மாலை வரை மொத்தம் 4,86,000 வீரர்கள் ரஷ்ய இராணுவத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ரஷ்ய வீரர்களுக்கு முன்வரிசை
மேலும், ரஷ்ய வீரர்களுக்கு முன் வரிசையில் போதுமான பொருட்கள் இல்லை என்று நிருபர் வினவிய கேள்விக்கு, 'நிலைமை மேம்படவில்லை என்று நீங்கள் கூற முடியாது' என புடின் பதிலளித்துள்ளார்.
அத்துடன் ஹமாஸ் குழுவிற்கு எதிரான போரினால் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவதையும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையையும் அவர் வேறுபடுத்தியுள்ளார்.
'உக்ரைனில் எங்கள் சிறப்பு இராணுவ நடவடிக்கையையும், காசா பகுதியையும் பாருங்கள். வித்தியாசத்தை உணருங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலைத் தீர்ப்பதற்கான உலகளாவிய முயற்சிகளில் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) சிறந்த தலைவராக செயல்படுவதாகவும் புடின் கூறியுள்ளார்.