காசா நடவடிக்கை தொடர்பில் புடின் ஆதரவுக் குரல்
காசாவில் எதிர்பார்க்கப்படும் போர்நிறுத்தம், அந்தப் பகுதிக்கு உணவு, எரிபொருள் மற்றும் மருந்து விநியோகத்தில் "குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு" ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) கூறியுள்ளார்.
இவை அனைத்தும், மனிதாபிமான நிலைமையைத் தணிப்பதற்கும், நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
முக்கிய நட்பு நாடான ஈரானுடன் ஒரு பெரிய பொருளாதார மற்றும் தற்காப்பு கூட்டாண்மையில் கையெழுத்திட்ட பிறகு ரஷ்ய ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஈரானிய ஜனாதிபதி
இதன்போது கருத்து தெரிவித்த ஈரானிய ஜனாதிபதி பெஷேஷ்கியான் , காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் இரு தரப்பினரும் மத்திய கிழக்கில் செல்வாக்கை இழந்துள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும், போர்நிறுத்தம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று நம்புவதாக பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார்.
காசாவில் ஒரு உறுதியான போர்நிறுத்தமும், இந்த நிலத்திற்கு எதிரான ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளியுமாக இந்த போர்நிறுத்தம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என பெஷேஷ்கியான் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam