உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த புடின்
உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இன்று (ஜூன் 5) புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் 100 நாட்களாக நீடித்து வருகிறது. ரஷியப் படைகள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளது.
இருப்பினும், கடந்த சில தினங்களாக உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணைகளை சில மேற்கத்திய நாடுகள் கொடுத்து உதவுவதாக தகவல் வெளியானது.
ரஷ்ய ஜனாதிபதி புதிய எச்சரிக்கை
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புதிய எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த எச்சரிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி அவர் தெரிவித்திருப்பதாவது,
“ உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், நாங்கள் அதற்கான சரியான முடிவை எடுக்க நேரிடும். எங்களது ஆயுதங்களை அவர்களின் மீது உபயோகிக்க வேண்டி வரும்” என எச்சரித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அதிகாலை ரஷ்யா திடீர் என ஏவுகணை தாக்குதல்களை நடந்த்தியது பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
உக்ரைனின் தலைநகரைத் தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள் , குறிப்பிடப்படாத உள்கட்டமைப்பு இலக்குகளைத் தாக்கியதாக கீவ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை, ஆனால் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 28 அன்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உக்ரைனுக்கு வருகை தந்தபோது தகலைநகர் கீவ் மீது இதேபோன்ற ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இப்போது ஒரு மாதம் கழித்து மிண்டும் கீவில் தாக்குதலை நடத்தி அங்கு இருந்த அமைதி உணர்வை ரஷ்யா சிதைத்துள்ளது.