புடினுக்கு வலது கை முடங்கியதாக தகவல்
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு வலது கையில் பார்ஸவாத நோய் ஏற்பட்டு கை முடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதனை உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது வெளியாகியுள்ள காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காணொளியில் புடின், தனது முகத்தை இடது கையால் துடைக்கிறார். அவரால் வலது கையை பாவிக்கவே முடியவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒவ்வொரு ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் கொண்டாடப்படும் ரஷ்யாவின் கடற்படை தினத்தைக் குறிக்கும் வார இறுதி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 69 வயதான புடின் இராணுவ அருங்காட்சியகத்தில் சுற்றுப்பயணம் செய்திருந்தார்.
இதன்போது பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் மகளுடன் புடின் பேசுவதைக் காண முடிந்தது, அப்போது அவர் முகத்தைச் சுற்றி கொசுக்கள் பறக்க ஆரம்பித்துள்ளன.
எனினும், புடின் தனது இடது கையைப் பயன்படுத்தி கொசுக்களை தடுக்க முயற்சிக்கத் தொடங்கினார், அதே நேரத்தில் அவரது வலது கை பக்கவாட்டில் தளர்வாகக் காணப்பட்டது.
இதேவேளை, அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க்கப்பலுக்கு சிர்கான் ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்கும் பணி வரும் மாதங்களில் தொடங்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நகரில் ரஷ்யாவின் கடற்படை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதில் பங்கேற்று பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், நாட்டின் பாதுகாப்பில் கடற்படையின் திறன், நமது இறையாண்மை மற்றும் சுகந்தரத்தை மீற முடிவு செய்யும் அனைவருக்கும் மின்னல் வேகத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளது எனத் தெரிவித்தார்.