வாக்குறுதியை மீறும் புடின்..! உக்ரைனில் தொடரும் சோகம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்த பின்னரும் உக்ரைனில் தாக்குதல்கள் தொடர்வதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு தற்காலிக போர்நிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக புடின் அறிவித்திருந்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுகிழமை முடிவடையும் வரை இந்த போர்நிறுத்தம் நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
நிபந்தனையற்ற போர்நிறுத்தம்
எனினும், ரஷ்ய இராணுவம், உக்ரைனிய படைகளின் எந்த மீறல்களையும் தடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையிலேயே, ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்வதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தில் ஈடுபட ரஷ்யா தயாராக இருந்தால் உக்ரைன் அதன்படி செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |