முல்லைத்தீவில் பற்றைக்காடாக கிடக்கும் சுடலை! கண்டுகொள்ளுமா புதுக்குடியிருப்பு பிரதேச சபை என மக்கள் விசனம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் சுடலை ஒன்று பற்றைக்காடாக காணப்படுகின்றது.
இதனை பிரதேச சபை இதுவரை கண்டுகொள்ளாத நிலை காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள்
புதுக்குடியிருப்பு வெள்ளப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள சுடலையே இவ்வாறு காணப்படுகின்றது மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக காணப்படும் சுடலைகளை சுத்தம் செய்வது புனரமைப்பு செய்வது சீர்செய்வது போன்ற நடவடிக்கைகள் பிரதேச சபையின் கீழே காணப்படுகின்றது.

இந்த நிலையில் வெள்ளப்பள்ளம் சுடலையில் இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாத நிலையில் எரிகொட்டகை அமைத்துக்கொடுக்கப்பட்டாலும் அருகில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் சுத்தம் இல்லாத நிலை காணப்படுகின்றது.
உடையார்கட்டுவடக்கு,சுதந்திரபுரம்,வெள்ளப்பள்ளம் கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சுடலையினையே பயன்படுத்தி வருகின்றார்கள் தேர்தல் வாக்குக்கேக்கும் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து வட்டாரங்களில் இருந்து தெரிவான பிரதேச சபை உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.





புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri