பாகிஸ்தானில் எரியூட்டப்பட்ட இலங்கையர் தொடர்பில் நாளாந்த விசாரணைக்கு உத்தரவிட்ட பஞ்சாப்
பாகிஸ்தான் சியால்கோட்டில், இலங்கையின் மேலாளர் "பிரியந்த குமாரவை" தாக்கி கொலை செய்தமை தொடர்பில் விசாரணையை நாளாந்த அடிப்படையில் நடத்த பாகிஸ்தானின் பஞ்சாப் பிராந்திய மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சட்ட அமைச்சர் முஹம்மது பஷரத் ராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டது.
இந்தநிலையில் இது தொடர்பில் 14 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய புலனாய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகத்துக்குரியவர்கள் தொடர்பான விசாரணையை சிறைக்குள் நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கையரான பிரியந்தகுமார கடந்த டிசம்பர் 3ஆம் திகதியன்று பாகிஸ்தான் சியால்கோட்டில் தாம் பணியாற்றும் தொழிற்சாலையில் பணியாளர்கள் ஒட்டிய சுவரொட்டியை அகற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டு அங்குள்ள பணியாளர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.