மயங்கிய நபரை பிரேத அறைக்கு அனுப்பிய வைத்தியருக்கு கிடைத்த தண்டனை
உயிரிழந்ததாக தீர்மானிக்கப்பட்ட நபர் ஒருவரை பிரேத அறைக்கு அனுப்பிய நீர்கொழும்பு வைத்தியர் புத்தளம் வைத்தியாசலையில் தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரையே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவமதாக பிரதி இயக்குனர் லால் பானப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கமைய எதிர்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சின் செயற்பாடு என நீர்கொழும்பு வைத்தியசாலையின் இயக்குனர் வைத்தியர் நிர்மலா லோகநாதன் தெரிவித்துள்ளார்.
இரத்தத்தில் சீனி அளவு குறைந்தமையினால் மயக்கமடைந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துவிட்டதாக கூறி கடந்த 9ஆம் திகதி பிணவறைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
பின்னர் அவரது உடலில் அசைவுகள் அவதானிக்கப்பட்டு சாதாரண அறைக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri