புல்லாவெளி செபஸ்தியார் ஆலய முகப்பு இடிந்து விபத்து: இளைஞன் படுகாயம்
வடமராட்சி கிழக்கு புல்லாவெளி செபஸ்தியார் ஆலயத்தின் முகப்பு திடீரென இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புல்லாவெளி செபஸ்தியார் ஆலயத்திற்கு வருகைதந்திருந்த ஒரு குடும்பம் நேற்று இரவு அங்கு தங்கியுள்ளனர்.
குறித்த ஆலயத்தின் முகப்பு பகுதியில் நேற்று இரவு தங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் கட்டைக்காட்டைச் சேர்ந்த வினோத் என்பவரே படுகாயமடைந்துள்ளார். அத்தோடு மோட்டார் வண்டியும் சேதமாகியுள்ளது.
படுகாயமடைந்த இளைஞர் ஆம்புலன்ஸ் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு
செல்லப்பட்டுள்ளார்.



இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
