குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை:பூஜித் மற்றும் ஹேமசிறி விடுதலையாகும் வாய்ப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ(Hemasiri Fernando) மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர (Pujith Jayasundara) ஆகியோர் விடுதலையாகும் அடையாளங்கள் தென்படுவதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு எதிராக தலா 855 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் நாமல் பலல்ல, ஆதித்திய பட்டபெந்திகே, மொஹமட் இர்ஸடீன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வழக்கு விசாரணைக்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு எதிரான குற்றப் பத்திரிகைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கையளிக்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் வரை முறைப்பாட்டாளர் தரப்பிலான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.
இந்த விசாரணைகள் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி முடிவடைந்தன. குற்றம் சுமத்தப்பட்ட தரப்பின் வாதங்களை கேட்காமலேயே குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுதலை செய்வதா இல்லையா என்பது குறித்து நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் எதனையும் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்த முடியாது இருப்பதால், ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விடுதலை செய்யப்படலாம் என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
