ஒரே ஒரு கையெழுத்து! பூஜித் மற்றும் ஹேமசிறியை தூக்கிலிடலாம் - அநுரவுக்குச் சென்ற அறிவுரை..
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய இருவருக்கும் எதிராக ஜனாதிபதி அநுர குமார ஒரே ஒரு கையெழுத்தினை இட்டால் அவர்களைத் தூக்கிலிட முடியும். அப்படிச் செய்தால் இந்த அரசாங்கம் மக்களிடத்தில் இன்னும் பிரபலமடையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை அனைவருக்கும் தெரியும். எனினும், தற்போது சிங்களவர்கள் அதனை செய்ததாக காட்டுவதற்கு முயற்சி செய்யப்பட்டு வருகின்றது.
சிங்களவர்கள் மீதான தாக்குதல்கள்
கடந்த காலங்களில் சிங்கள மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. போர்த்துகீசர், ஆங்கிலேயர் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தினர். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கினர், தற்போது ஜேவிபியினரும் தாக்குதல் நடத்துகின்றனர்.

பூஜித் ஜயசுந்தரவும், ஹேமசிறி பெர்னாண்டோவும் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் 300 பேரைக் கொன்றனர். குண்டுகளை இயக்கச் செய்ததும் அவர்கள்தான் என்பது போல காட்டுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஆனால், ஜேவிபியுடன் தொடர்பில் இருந்து, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இப்ராஹிமுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் தற்போது பிரச்சினை இல்லை. அவர்கள் வெளியில் சுதந்திரமாக உள்ளனர். ஆனால், தண்டனை அனுபவித்து சிறைக்குள் இருப்பது பூஜித்தும், ஹேமசிறியும் ஆகும்.

மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் இன்னும் பிரபலமடைய வேண்டும் என்றால் இன்னும் ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கின்றது. முடியுமென்றால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு முடியும்.
வேண்டுமென்றால், கையொப்பம் ஒன்றை இட்டு அவர்களை தூக்கிலிட ஜனாதிபதிக்கு முடியும். அப்போது அரசாங்கம் இன்னும் மக்களிடத்தில் பிரபலமடைய முடியும்.
குற்றம் சுமத்தப்பட்ட, ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர். சிறையில் இருக்கவேண்டியவர்கள் இன்று வெளியில் உயர் பதவிகளில் சுதந்திரமாக உள்ளனர். வெளியில் இருக்க வேண்டியவர்கள் இன்று சிறையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் திருப்பம்: சாரா ஜஸ்மினின் உடல் தொடர்பில் நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்
YOU MAY LIKE THIS VIDEO