புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வு இடம்பெற்றுள்ளது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபை மாதாந்த அமர்வு புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தவக்குமாரன் தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமாகிய குறித்த பிரதேச சபை அமர்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கோவிட் நிலைமைகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் பிரதேச சபை அபிவிருத்தி நடவடிக்கைகள், ஆடைத் தொழிற்சாலை விவகாரம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள காடழிப்பு விவகாரம், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலை
ஊழியர்கள் பலருக்குக் கடந்த மாதம் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,
முடக்க நிலையில் புதுக்குடியிருப்பு நகர் இருந்த காரணத்தால் கடந்த மாதம்
கூட்டம் நடாத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri