மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு வெளியிட்டு உச்ச நீதிமன்றில் வழக்கு
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பை வெளியிட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரட்நாயக்கவினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தீர்மானம் கிடையாது
மின்சாரப் பயனர் என்ற அடிப்படையிலும் பொதுநல நோக்கிலும் வழக்குத் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மிகவும் குறைந்தளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் பயனர்களின் நலனை கருத்திற் கொண்டு வழக்குத் தொடரப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையினால் பரிந்துரை செய்யப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியதாக கூறப்பட்ட போதிலும் அவ்வாறு அனுமதி வழங்கப்படவில்லை என அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கியுள்ள போதிலும் அது ஆணைக்குழுவின் தீர்மானம் கிடையாது என தெரிவித்துள்ளார்.




