தேசபந்துவின் வீட்டில் 1009 மதுபான போத்தல்கள்! நாடாளுமன்றில் அம்பலமான தகவல்
நீதிமன்றில் சரணடைந்த தேசபந்து தென்னகோனின் வீட்டில் இருந்து 1009 மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) நாடாளுமன்றில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்போதே மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
ஆனந்த விஜேபால
பல நாட்களாக நாட்டில் தலைமறைவாக இருந்து பாதுகாப்பு துறையின் சிறப்பு கவனத்தை ஈர்த்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று (18) குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு குழு ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னகோனின் வீட்டை ஆய்வு செய்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அங்கு 1009 மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதில் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 214 மது போத்தல்கள் உள்ளடங்குவதாகவும் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
நவீன கையடக்க தொலைபேசிகள்
அவரது துப்பாக்கி என்று சந்தேகிக்கப்படும் ஒரு பிஸ்டலையும், வீட்டிலிருந்த இரண்டு நவீன கையடக்க தொலைபேசிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக விஜேபால சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கையடக்க தொலைபேசிகள் மூலம் அதிக அளவிலான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் அவர் விளக்கியுள்ளார்.
எதிர்காலத்தில் இந்த விடயம் குறித்து நீதிமன்றங்களுக்கு அறிக்கை அளிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேசபந்து தென்னகோனின் மனைவி அதுருகிரிய பொலிஸில் முறைப்பாடு ஒன்னை பதிவு செய்துள்ளார்.
ஹோகந்தரவின் கிழக்குப் பகுதியில் உள்ள தேசபந்து தென்னகோனின் வீட்டை, சோதனை அறிக்கை இல்லாமல், பொலிஸ் அதிகாரிகள் குழு சோதனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை... தொலைபேசியில் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் News Lankasri
