பொது போக்குவரத்து சேவை விசேட பொறிமுறையூடாக விரிவுபடுத்தப்பட வேண்டும்: பிரசாந்தன் கோரிக்கை

Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Rusath Jul 08, 2022 02:12 PM GMT
Report

அரச அதிகாரிகளும் பொது மக்களும் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்த முனையும் நிலையில் பொது போக்குவரத்து சேவையானது விசேட பொறிமுறையூடாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருக்கு நேற்று (07) அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நாடு தற்போது எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளவிய ரீதியில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

அரசாங்கமானது பொது போக்குவரத்து மற்றும் துவிச்சக்கர வண்டியினை பயன்படுத்துவதை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை தாங்கள் அறிந்த விடயமே. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அதிகளவானவர்கள் அரச ஊழியர்கள், மாணவர்கள், விவசாயிகள், பொது மக்கள் என அனைவரும் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்த முற்படுகின்றனர்.

விசேட பொறிமுறை

பொது போக்குவரத்து சேவை விசேட பொறிமுறையூடாக விரிவுபடுத்தப்பட வேண்டும்: பிரசாந்தன் கோரிக்கை | Public Transport Service Special Mechanism Sl

இந் நிலையில், பொது போக்குவரத்து சேவையானது விசேட பொறிமுறையூடாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மாகாண போக்கு வரத்து சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் நேர ஒழுங்கமைப்பு பயணிகளின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும்.

அத்துடன் அத்தியாவசிய நிலையினைக்கருத்திற் கொண்டு விஷேட சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

கடந்த ஒரு வாரமாக பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்தியதன் மூலம் நான் கண்ட அனுபவத்தின்படி அரச அதிகாரிகளும் வைத்தியர்களும் பொதுப் போக்குவரத்து சேவையினை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் குறித்த நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்வதற்கும் ஏனைய தொழில் நிலையங்கள் மற்றும் சேவைகளுக்கு செல்வதற்கும் போக்குவரத்து சேவையானது போதுமானதாக காணப்படவில்லை.

அத்தோடு தூர இடங்களுக்கு பயணிக்கின்ற பொது போக்குவரத்து சேவையில் குறுந்தூரத்திற்கு பயணிக்கின்ற அதிகாரிகளை ஏற்றிச் செல்வதில் பல அசௌகரியங்கள் எதிர்நோக்கப்படுகின்றது.

ஆகவே தற்போது ஏற்பட்டிருக்கின்ற எரிபொருள் தட்டுப்பாட்டு நிலையில் குறுகிய நிலையிலாவது அலுவலகங்களையும் மற்றைய சேவைகளையும் வழங்க வேண்டுமாக இருந்தால் போக்குவரத்து சேவை என்பது மிக மிக அத்தியாவசியமானதொன்றாக உணரப்பட்டிருக்கின்றது அந்த வகையில் இப்போது போக்குவரத்து சேவை பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

எரிபொருள் நெருக்கடி

பொது போக்குவரத்து சேவை விசேட பொறிமுறையூடாக விரிவுபடுத்தப்பட வேண்டும்: பிரசாந்தன் கோரிக்கை | Public Transport Service Special Mechanism Sl

குறித்த போக்குவரத்து சேவையினை வழங்குகின்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தங்களது தொழிலுக்கு செல்வதற்கான தங்களது பிரத்தியேக (மோட்டார் சைக்கிள்களுக்கு) வாகனங்களுக்கான எரிபொருள், தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதன் காரணமாக பலர் வேலைக்கு செல்ல முடியாமல் விடுமுறையில் உள்ளனர்.

அதன் காரணமாக போக்குவரத்து சேவை வழங்குவதில் பல இடையூறுகள் ஏற்பட்டு இருப்பதாகவும் இலங்கை போக்குவரத்து அதிகார சபை அதேபோன்று மாகாண போக்குவரத்து சேவை திணைக்கள பணிப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சேவையினை ஓரளவேனும் வழங்குவதற்கு போக்குவரத்து சேவையினை அத்தியாவசிய சேவையாக கருத்திற்கொண்டு இவர்களுக்கான எரிபொருட்களை வழங்குவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதோடு முச்சக்கரவண்டி சாரதிகளுடம் தற்களது போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கான எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதற்கும் ஆவன செய்யுமாறும்” குறிப்பிட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US