வத்தளை பகுதியில் சுவாசப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் மக்கள் (Video)
வத்தளை, குடா ஏதண்ட மற்றும் புனித அந்தோனியார் வீதி பகுதிக்கு இடையில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் குழாய்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை இடமாற்றம் செய்ய வேண்டும் என அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வத்தளை பொலிஸ் நிலைத்திலும், வத்தளை - மாபோல நகரசபையிலும், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரிடம் அப்பகுதி பொதுமக்கள் பல தடவைகளில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இருந்தும் எந்தவித தீர்வும் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் நேற்றைய தினம் அப்பகுதி வாழ் மக்கள் ஒன்றினைந்து வத்தளை - மாபோல நகரசபைக்கு சென்று குறித்த பிரச்சினை தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.
பின்னர் குறித்த குழுவினருடன் அங்கு வருகைதந்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த பிளாஸ்டிக் தொழிற்சாலையின் செயற்பாடுகள், தொழிற்சாலை அமைந்திருக்கின்ற பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகள் குறித்து கள ஆய்வொன்றை மேற்கொண்டனர்.
இது தொடர்பான விரிவான தொகுப்பு காணொளியில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
