புதுக்குடியிருப்பில் அரச வங்கியால் சிரமத்தை எதிர்கொள்ளும் பொதுமக்கள்
புதுக்குடியிருப்பில் உள்ள இரு அரச வங்கிகளில் இலத்திரனியல் இயந்திரம் சீரின்மையால் இலத்திரனியல் அட்டை பாவனையாளர்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள அரச வங்கிகளின் இலத்திரனியல் இயந்திரத்தில் (ATM) பாவனையாளர் ஒருவர் இன்றையதினம் (09.03.2025) இலத்திரனியல் அட்டையினை செலுத்தி பணம் எடுப்பதற்காக இயந்திரத்திற்குள் இலத்திரனியல் அட்டையினை (Atm card) செலுத்தியுள்ளார்.
அப்போது பணம் வழங்கப்பட்டதாக வைப்பிலிருந்து வெட்டப்பட்டு தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் இலத்திரனியல் இயந்திரத்திலிருந்து பணமும், இலத்தினியல் அட்டையும் வெளிவரவில்லை.
பாதுகாப்பு உத்தியோகத்தர்
அவ்விடத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தரும் இருந்திருக்கவில்லை.
அதேபோன்று புதுக்குடியிருப்பு மற்றுமொரு அரச வங்கியில் வேறொரு நபர் இன்றையதினம் தனது இலத்திரனியல் அட்டையினை இலத்திரனியல் இயந்திரத்திற்குள் செலுத்திய போது இலத்திரனியல் அட்டை எந்த ஒரு செயற்பாடும் இல்லாமல் வெளிவரவில்லை.
குறித்த வங்கியில் இருந்த உத்தியோகத்தர்களிடம் வினவிய போது உத்தியோகத்தர்கள் இருந்த போதும் இன்றையதினம் தரமுடியாது என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே இவ்வாறு பல்லாயிரக்கண மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் உள்ள அரச வங்கிகளின் இலத்திரணியல் இயந்திரங்கள் சீரின்மையால் அவசரநிலமைகளில் தேவைகளுக்கு பணம் எடுப்பவர்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 18 மணி நேரம் முன்

2 கதாநாயகன், 2 நாயகி வைத்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிக்கப்போவது இவர்தானா? Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் Cineulagam

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்.. இவர்தான், போட்டோ இதோ Cineulagam
