இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு
இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையின் 7 மணித்தியால மின்தடை கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
நாட்டில் நாளைய தினம் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்தடையை நடைமுறைப்படுத்த மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், குறித்த இக்கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. இதன்படி, நாளை 5 மணித்தியால மின்தடை நடைமுறைப்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், நாளை காலை முதல் மாலை வரையில் 3 - 4 மணித்தியாலங்களும், மாலை முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் 1 - 2 மணித்தியாலங்களும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri