யாழ்.தீவக வலய கல்வி அதிகாரிகள் மீது பொதுமக்கள் தாக்குதல்
யாழ்.தீவக வலய பாடசாலை ஒன்றில் அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலை(17.07.2023) பாடசாலையில் விசாரணைகளை நடத்தச் சென்ற கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவகம் மண்கும்பான் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த புதன்கிழமை(12.07.2023) தரம் 4,இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீது பாடசாலை அதிபர் தாக்கியதாக பெற்றோரினால் குற்றம் சுமத்தப்பட்டது.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம்(16.07.2023) குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தீவக கோட்டக் கல்வி அதிகாரிகள் சிலர் பாடசாலையில் விசாரணைகளை மேற்கொள்ள சென்றிருந்த நிலையில் அங்கு கூடி இருந்த பொதுமக்கள் கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
