திடீரென காணாமல்போன 15 வயது சிறுமி! பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
களுத்துறை - பண்டாரகமை , வீரகெப்பெத்திபொல மாவத்தையின் கங்கமுவ பகுதியில் வசித்து வந்த சிறுமியொருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாக காணாமல்போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க பண்டாரகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
டிசம்பர் (19) அன்று சிறுமி தாய், குடியிருப்பாளர்களுக்கு தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போயுள்ளதாக பண்டாரகமை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்
இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள சிறுமியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கரநாயக்க ஹசந்தி திவெத்மி என்ற 15 வயது சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தின் 071 - 8591681 அல்லது 038 - 2290222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan