ரஞ்சன் கையொப்பமிட்ட பொதுமன்னிப்பு ஆவணம் சஜித்திடம்
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கையெழுத்திட்டுள்ள பொதுமன்னிப்புக் கோரும் கடிதம் அவரின் சட்டத்தரணி ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாஸ ஆவணங்களைப் பெற்றுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் குறித்த ஆவணங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளிடம் ஒப்படைத்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த ஆவணங்கள் விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
