மூதூரில் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் போராட்டம் (Video)
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெறவுள்ள செயல் திட்டத்தின் 43ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
மூதூர் - மல்லிகைத்தீவு பிரதேசத்தில் இன்று மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த போராட்டமானது திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள்
எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டுமெனவும், எங்கள் நிலம் எமக்கு வேண்டுமெனவும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை எனவும் கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக வருகைதந்ததுடன் தங்களின் உரிமை கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர்.
குறித்த போராட்டம் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
