நல்லாட்சி அரசாங்கத்தில் சுமந்திரன் பிரதி பிரதமரா?- அலி சாப்ரி- சுமந்திரன் கடும் வாதப்பிரதிவாதம்!
நாடாளுமன்றத்தில் இன்று நீதியமைச்சர் அலி சாப்ரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பயங்கரவாத தடைச்சட்ட திருத்த சட்டமூல விவாதத்தின்போதே இந்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
1970ஆம் ஆண்டுக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை திருத்த தற்போதைய அரசாங்கமே முனைப்புக்களை மேற்கொண்டுள்ளது என்று அலி சாப்ரி குறிப்பிட்ட போது வாதிட்ட எம்.ஏ சுமந்திரன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் திருத்தங்கள் போதுமானதல்ல, அது ரத்துச்செய்யப்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.
எனினும் இதற்கு பதிலளித்த அலி சாப்ரி, இந்த அரசாங்கம், திருத்தங்களை கொண்டு வருகின்றபோதிலும் நல்லாட்சி அரசாங்கத்தில் எந்த முனைப்பும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்த அரசாங்கத்தின் பிரதி பிரதமராக சுமந்திரன் செயற்பட்டபோதும், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக எந்த முனைப்பும் எடுக்கப்படவில்லை என்று சாப்ரி சுட்டிக்காட்டினார்.
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri