சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்: வடக்கு ஆளுநர்
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ரோட்டரி கழகத்தின் தலைவர் தெரிவு மற்றும் பயிற்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை கல்வி
”போலியோ தடுப்பு மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட சிறந்த சேவைகளை ரோட்டரி கழகம் முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சியளிக்கின்றது.
வசதிகள் இல்லாத மாணவர்கள் பாடசாலை கல்வியை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் கற்றல் வசதிகள் இல்லாதவர்களை அடையாளம் கண்டு ரோட்டரி கழகம் உதவ முன்வந்துள்ளமைக்கு மிக்க நன்றி, கல்வியால் முழு சமூக கட்டமைப்பையும் மாற்ற முடியும்.
நாட்டின் வட முனையில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு பாரிய அளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதற்கான சிறிய செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறு" வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |