யாழ்.தொழிநுட்பக் கல்லூரிக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் (Video)
யாழ்ப்பாணம் - கொக்குவிலில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரிக்கு தேவையான பத்து இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தையல் இயந்திரம் உள்ளிட்ட குறித்த உபகரணங்கள் இன்றைய தினம் (31.07.2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாக கொண்ட தொழிநுட்பக் கல்லூரியின் பழைய மாணவன் தொழிநுட்பக் கல்லூரியின் வளர்ச்சிக்காக இந்த உபகரணங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.
இந்த உபகரணங்கள் ஐ.பி.சி குழுமத்தின் தலைவரும், புலம்பெயர் தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள குறித்த கல்லூரியானது பாரம்பரியம் நிறைந்ததும் 75 வருடங்களை தாண்டி இயங்க கூடியதுமான ஒரு கல்லூரியாகும்.
எவ்வித வளர்ச்சிப்படிகளை காணாமலும், மாணவர்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமலும், எவ்வித அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படாமலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இயங்கி வருகிறது.
இதேவேளை தொழிநுட்பக் கல்லூரியில் துறைசார்ந்த கற்கைநெறிகளை கற்கும் மாணவர்கள் 25 வருட பழமையான கருவிகளை உபயோகித்து புதிய தொழிநுட்பங்களை கற்று வருகின்றனர்.


