மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்த முயற்சி:மகிந்த ஜயசிங்க தெரிவிப்பு
எமது அரசாங்கம் அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்கின்றது என்று தொழிற்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று(22) இடம்பெற்ற தொழிற்சந்தையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், "எமது அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளது.
தற்போது நாட்டில் அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்குத் தடை வராமல் அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் நடைபெறும் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டதோடு அலுவலத்தையும் கண்காணித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








