மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளூராட்சி சபைகள் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது! : புஞ்சிஹேவா (Photos)
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள்,நகர சபைகள் இயங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று (27) தேர்தல் ஒன்றை முன்னெடுக்கும் போது முன்னேற்பாடாக செயற்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளின் நிர்வாகத்தில் மாகாணசபைகள் இயங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இக்காலகட்டத்தில் மாகாணசபை தேர்தல் இடம்பெற வேண்டுமாயின் அதற்கான முடிவு நாடாளுமன்றத்திடம் இருக்கின்றது நாடாளுமன்றத்தின் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் ஆக இருந்தால் உடனடியாக தேர்தலை நடாத்த தயாராக உள்ளோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. ஹேவா குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மாகாண சபைகள் தற்போது இயங்குகின்றன மாகாண சபைகள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சு இருக்கின்றது அந்த அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.அதேபோன்று மாகாண சபைகளுக்கு என அரசாங்கத்தினால் தனியாக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது.
இவ்வாறான கட்டமைப்புக்களின் செயற்பாடுகளின் ஊடாக மாகாணசபைகளில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு இல்லாமல் அதிகாரிகளினால் இந்த மாகாணசபைகளின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டியது அவசியமாகி உள்ளது இந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழு இணக்கம் வெளியிடப் போவதில்லை.
மக்கள் பிரதிநிதிகள் இருக்கவேண்டிய இடத்திற்கு பதிலாக அதிகாரிகள் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்களின் தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பீ.திவரத்ன.கே.பீ.பீ.பத்திரன. மேலதிக ஆணையாளர் பீ.சீ.சீ. குலரத்ன தேர்தல் ஆணைக்குழுவின் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சன்னி பீ.டி.சில்வா திருகோணமலை மாவட்டத்தின் உயர் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam