மாகாணசபைகள் தொடர்பான ஆபத்து நிலைமை! மோதல் குறித்து சபையில் எச்சரிக்கை
மில்லியன் கணக்கில் முதலீடுகளை மாகாணசபைகளுக்கு கொண்டு வர முடியும் என்று கூறுகின்றனர், இதன் ஆபத்துக்களை இந்த சபை சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (09.08.2023) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஏதேனும் மாகாணத்திற்கென முதலீட்டை கொண்டு வர முடியாது. சீனாவை உதாரணமாக கூறியுள்ளீர்கள். அது தனி கட்சி நாடு. அங்குள்ள நிலைமை வேறு. அதனை இங்கே ஒப்பிட முடியாது.
இப்போது மீண்டும் மக்கள் அலை ஏற்பட்டு மோதல் நிலைமைகளுக்கு நாட்டை கொண்டு செல்ல முடியாது. மாகாணசபை முறையை இப்போதும் தாம் எதிர்ப்பதாக என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
