கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு யோசனை
மாகாண சபைத் தேர்தலை தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்புமுறையில் நடத்துவதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது என அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக கட்சித் தலைவர்களைக் கூட்டி இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, தற்காலத்தில் தேர்தல் ஒன்று நடக்குமானால் அரசு தோல்வியடைவது நிச்சயம் என ஆனந்த தேரர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,இலங்கையில் தற்போதிருக்கும் சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என தெரிவித்து முக்கிய பௌத்த தேரர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கசப்ப தேரர், விமலஜோதி தேரர் உட்பட பல தேரர்களின் கையொப்பத்துடன் இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 12 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam