மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..!

Sri Lankan Tamils Tamils Anura Kumara Dissanayaka Mullivaikal Remembrance Day Janatha Vimukthi Peramuna
By T.thibaharan Jul 12, 2026 09:24 AM GMT
Report

தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வை முன் வைக்க ஜேவிபியினர் ஒருபோதும் தயார் இல்லை. இனியும் அவர்கள் ஒரு தீர்வு பற்றி பேசப் போவதும் இல்லை.

ஆனால் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து மாகாண சபை பன்முண்டம் திருத்தச் சட்டம் பத்தி பேசுகின்ற போதெல்லாம் அதற்கு எதிராகவே ஜேவிபி குரல் கொடுத்திருக்கிறது..இனியும் அதேதான் அது செய்யும்.

ஏனெனில் இந்த மாகாண சபை முறை இந்தியாவின் திணிப்பு என்றும் இலங்கையின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரான செயல் என்று ஆணித்தரமாக தமது கருத்தை வலியுறுத்துகின்றனர்.

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா..! பதற்றத்தில் உலக நாடுகள்..

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா..! பதற்றத்தில் உலக நாடுகள்..

தமிழ் மக்கள்

சரி அவ்வாறு இந்தியாவின் திணிப்பு என்று கூறுபவர்கள் தமிழ் மக்கள் ஏற்கக்கக் கூடியதும் தாம் முன்வைக்க வேண்டியதுமான சரியான தீர்வை தமிழ் மக்களுக்கு அவர்கள் முன்வைத்திருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இலங்கையின் சிங்கள மக்களுக்கும் மீட்சி இல்லை தேசிய பொருளாதாரத்திலும் மீட்சி இல்லை நாட்டின் தேசிய சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது.

இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தையும் மாகாண சபை முறைமையையும் ஜேவிபி தொடக்கத்தில் இருந்தே இன்று வரை எதிர்த்து வருகின்றது.

இணைக்கப்பட்ட வடக்குக்-கிழக்கு மாகாண சபைகளை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று இன்றைய ஜனாதிபதி, அநுரகுமார திசநாயக்க தலைமையில் ஜேவிபி நீதிமன்ற வழக்கொன்றை 14-07-2006 தாக்கல் செய்தது.

மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! | Provincial Council Election Warning Signal Tamils

அதற்கு 16-10-2006 ல் இலங்கை உச்ச நீதிமன்றம் வடக்கு கிழக்கு இணைப்பில் இணைக்கப்பட்ட முறைமை தவறானஎன தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் 01-01-2007 சட்டரீதியாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டது.

ஜேவிபி எதை விரும்பியதோ அதில் முழுமையாக வெற்றி பெற்றது. தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களற்ற ஒரு அரைகுறை மாகாண சபையை கூட தொடர்ந்து நடத்த விடாமல் தடுப்பதில் சிங்கள ஆட்சியாளர்களும், சிங்கள கட்சிகளும் வெற்றி பெற்று வருகின்றனர்.

சிங்கள இனவாத அரசியல் யாப்புக்கு உட்பட்ட தம்மாலேயே உருவாக்கப்பட்ட அந்த அரைகுறை அரசியல் யாப்பு ஏற்பாட்டை கூட கடந்த 9 ஆண்டுகளாய் தொடர்ந்து செயல்படுத்தாமல் இருப்பது கவனத்திற்குரியது.

சிங்கள இனவாதத்தின் அர்த்தத்தில் அவர்களின் யாப்பை அவர்களே கொலை செய்து வருவதை இது காட்டுகிறது. அவர்களின் உண்மையான நோக்கம் தமிழ் மக்களுக்கு எந்தவித அரசியல் உரிமைகளையும் வழங்காது தமிழ் இனத்தை அடையாளம் இன்றி இலங்கை தீவில் அழித்தொழிப்பதுதான்.

இது மகாநாமதேவரின் தம்ம தீபக் கோட்பாட்டை ஜேவிபினரும் தொடர்ந்து கைகொள்கிறார்கள் என்பதை வெளிப்படையாக சுட்டி நிற்கிறது. ஜேவிபியின் ஆயுதப் போராட்டம் என்பது சிங்கள தேசத்தின் ஆட்சி அதிகாரக் கைப்பற்றுவதுதான்.

விம்பிள்டன் கோப்பையை வென்ற செக்குடியரசு வீராங்கனை

விம்பிள்டன் கோப்பையை வென்ற செக்குடியரசு வீராங்கனை

முள்ளிவாய்க்கால் பேரழிவு

ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது தமிழினத்தை சிங்கள பௌத்த இனவழிப்பிலிருந்து பாதுகாப்புக்கான போராட்டமாகும். ஜேவிபி யினர் தம்மை மார்க்சிச லெனினிச இடதுசாரிகள் என்று அழைத்துக் கொண்டாலும் லெனின் குறிப்பிடுகின்ற தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை இவர்கள் முழுமையாக எதிர்கின்றனர்.

அந்த அடிப்படையில்த்தான் தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையை கேவிபினர் எதிர்க்கின்றனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி இனப்படுகொலையை ஆதரித்து முன் நின்று நடத்தியவர்கள்.

இன ஒடுக்கு முறையை மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பாளன் ஒடுக்கப்படுபவர் மீது மேற்கொள்ளுகின்ற வன்முறையையும், ஒடுக்கப்படுவோன் தன்னை தற்பாதுகாத்துக்கொள்வதற்காக ஒடுக்குமுறையாளன் மீது மேற்கொள்கின்ற வன்முறையையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது.

மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! | Provincial Council Election Warning Signal Tamils

ஒடுக்குபவனின் ஒடுக்குமுறை வன்முறையையும் ஓடக்கப்பஐவோனின் தற்காப்பிற்கான வன்முறையையும் சமப்படுத்தவும் முடியாது.

இந்த அடிப்படையில் அழிவுக்கு உட்பட்டிருக்கும் தமிழர்கள் ஒடுக்குமுறையாளர் மீது தம்மை பாதுகாக்க மேற்கொள்கின்ற வன்முறையை பயங்கரவாதம் என்று கூறி சமப்படுத்தும் ஜேவிபியினரை எப்படி இடதுசாரிகள் என அழைக்க முடியும்??இவர்கள் தெளிவான அர்த்தத்தில் இனவாதிகளே.

முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்களைக் கொன்றொழித்து இனப்படுகொலை செய்ததன் வாயிலாக ஆயுதப் போராட்டத்தை முடக்கியுள்ளனர்.

தமிழ் மக்களின் பாதுகாப்பு கவசமாக இருந்த ஆயுப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் அழித்தொழித்துள்ள பின்னணியில் பாதுகாப்புக்கான எந்தவித தடுப்புச் சுவரும் இல்லாது இரத்தம் சிந்தும் இனப்படுகொலையை அரங்கேற்றிய சூழலில், அதன் அடுத்த கட்டமாக 'சமாதானம்', ' தேசிய ஐக்கியம்', ' ஒருமைப்பாடு' என்று கூறிக்கொண்டு தமிழ் இனத்தை தோல் இருக்க சுளை பிடுங்கும் வகையில் சிங்கள இனமயமாக்கும் இன்னொரு கட்ட இனப்படுகொலையை ஜேவிபி அரங்கேற்றி வருகின்றது.

துப்பாக்கியால் இரத்தம் தோய்ந்த வகையில் செய்யப்படும் இனப்படுகொலையும் இனஅழிப்புத்தான். தமிழரை சிங்கள இனமாக இனமயமாக்கம் செய்வதும் இன அழிப்புத்தான்.

ஏன் ஜேவிபி யினர் கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றையும் முன்வைக்கவில்லை? அல்லது முன்மொழியவில்லை? அது பற்றி எதுவுமே பேசவுமில்லை என்பதனை மிக ஆழமாக ஆராய்வது அவசியமானது.

தமிழ் மக்களுக்கென வட-கிழக்கு மாகாணத்துக்கு உரிய அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் , அதற்கான அரசியல் அதிகார அலகை உருவாக்கி விட்டால், தமிழினம் தன்னை தற்காத்துக் கொண்டு விடும்.

அது மாத்திரமன்றி அது தனது பலத்தில் வடகிழக்கை பலப்படுத்தியும் விடும் என்பதோடு சர்வதேச ஆதரவோடு கிழக்கு மாகாணத்தில் இனவழிப்பை தடுத்துவிடும் என்பதனால் தமிழ் மக்களுக்கு என்று ஒரு அரசியல் தீர்வு இருக்கக் கூடாது என்பதில் ஜேவிபி மனசார விரும்புகிறது, அதையே தமிழ் மக்கள் சார்ந்த தனது கொள்கையாகக் கொண்டுள்ளது, இந்தப் பின்னணியில்தான் இப்போது நடைமுறைப்படாத அரைகுறை மாகாண சபை அரசியல் தீர்வை கூட இல்லாது ஒழித்து விட வேண்டும் என்று ஜேவிபி கங்கணம் கட்டி நிற்கிறது.

அமெரிக்காவின் முக்கிய இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் - நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்

அமெரிக்காவின் முக்கிய இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் - நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்

இலங்கை இந்தியா ஒப்பந்தம்

இப்போது இலங்கை அரசியல் யாப்பில் 13ம் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக பெயரளவுக்காவது ஒரு எழுத்து வடிவில் காணப்படும் இந்த மாகாண சபையை நீக்கினால் தமது முழு இரும்புக்கரம் கொண்டு இராணுவ சூழலில் தமிழ் மக்களை முற்றும் முழுவதுமாக 'சமாதானம் ' , 'இனஐக்கியம்' என்ற போர்வையில் சிங்கள இனமயமாக்கம் செய்து கொள்வது சாத்தியம் என்று சிங்கள இனவாத சக்திகள் முழுமையாக நம்புகின்றன.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு தலைமைகள் இல்லை, எல்லாம் உதிரிகளாய் உடைந்து போய்கிடக்கின்றன.

தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு ஆகக் குறைந்தது தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் சிலவற்றையாது பெற்றுக் கொடுக்க கடந்த 17 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் தலைவர்களாலும் முடியாமல்லை.

மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! | Provincial Council Election Warning Signal Tamils

இந்நிலையை மேலும் வளர்த்தெடுத்து தமிழ் மக்கள் மத்தியில் முற்றாகத் தலைமை இல்லாத ஒரு சூழலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்தினால் தமிழ் மண்ணில் தமிழ் தலைமைகள் பதவிக்க வரமுடியாது என ஜேவிபி நினைக்கின்றது.

எந்தவித அதிகாரங்களும் அற்று இந்த 39 ஆண்டுகளாக அதிகாரங்கள் படிப்படியாக பிடுங்கப்பட்டு தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக எதனையும் செய்ய முடியாத ஒரு அரை குறை மாகாண சபையைக் கூட தமிழர்கள் நடத்தக்கூடாது என்பதில் விடாப்படியாக உள்ளார்கள்- ஆயினும் இந்த வருடம் மாகாண சபை நடத்த முடியாது அடுத்த வருடம் மாகாண சபை நடத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையை இயங்க விடுவதும் அவர்களது திட்டமல்ல. அவ்வாறே , மாகாண சபை தேர்தல்களை வைப்பதும் அவர்களது நோக்கம் அல்ல. இந்த மாகாண சபை முறையை முற்றாகக் கலைத்து விடுவதே அவர்களது நோக்கம்.

அதற்கான வியூகத்தையும் வாய்ப்பையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசு 1987 கால கட்டத்தில் பிராந்திய மற்றும் உலக அரசியல் நெருக்கடியில் இருந்து தன்னை பாதுகாப்பதற்காக இலங்கை ஜனாதிபதி ஏ ஆர் ஜெயவர்த்தனா இந்திய அரசியலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பௌத்த சிங்கள அரசை பாதுகாப்பதற்கான ராஜதந்திர சேட் பாட்டில் ராஜதந்திர செயல்பாட்டில் வெற்றி பெற்றார் அதுதான் இந்தியா விரும்பிய அரசியல் தீர்வை சிங்கள தேசத்துக்கு சாதகமாக மாற்றும் பாக்கு நீரினை அரசியல் சக்கர வியூகமாக(Entanglement) இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை மாற்றிவிட்டார்.

இந்தியாவுடனான ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையிற்தான் இந்த மாகாண சபையை உருவாக்கினார்கள். ஆதலால் இதனை நீக்குவதற்கு, குலைப்பதற்கு இந்தியாவுக்கு பதில் சொல்ல வேண்டும்.

அதே நேரத்தில் இந்தியாவும் இந்த மாகாண சபையை முறமையை நிராகரிக்கவும் முடியாது அதைவிட மேலும் செல்ல முடியாமலும் உள்ளது.

ஆகவே இந்த மாகாணம் சபை முறை என்பது இந்திய அரசும் ஈழத் தமிழர்களும் மாட்டியிருக்கும் ஒரு சக்கர வியூகம்தான் என்பதனை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் இன்னிலையில் தமிழருக்கான தலைமைகள் எனப்படுவோர் பெரிதும் சீரழிந்து சீர்கெட்டு ஓடுகாளிகளாக இருக்கக்கூடிய இன்றைய சூழலில், வட மாகாணத்தை தாம் தேர்தல் மூலம் நிச்சயமாக கைப்பற்ற முடியும் என நம்பும் ஒரு சூழல் உருவாகின்ற போது மாகாண சபைகளுக்கான தேர்தல்களை வைக்கலாம் என்று ஜேவிபினர் திட்டமிட்டுள்ளனர்.

மாகாண சபை 

ஆதலால் தான் இப்போது தமக்கு சாதகமான சூழல் இல்லை என்பதனால் இவ்வருடம் தேர்தல் நடத்த நிதி இல்லை என்று சொல்லி மாகாண சபைகளுக்கான தேர்தல் இனி அடுத்த வருடம்தான் என்று கதை அளக்கிறார்கள். அவர்களின் கபடத்தனமான திட்டம் பின்வருமாறு அமைய வாய்ப்புண்டு என்பதை தமிழ் மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது வட மாகாண சபையை ஜேவிபி இனர் கைப்பற்றி விட்டால் மாகாண சபை முறைமை வேண்டாம் என்று மாகாண சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அந்தத் தீர்மானத்தை ஜனாதிபதியையும் நாடாளுமன்றத்தையும் நோக்கி நிறைவேற்றிவிட்டு மாகாண சபை முறையை கலைப்பதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அதற்குப் பின்னர் தமிழர்களே மாகாண சபையை எதிர்க்கிறார்கள் என்பதன் ஊடாக இந்திய அரசு எந்த வகையிலும் தலையிட முடியாமல் போய்விடும். அத்தோடு ஜேவிபிக்கு நாடாளுமன்றத்தில் 3/2 பெரும்பான்மை இருப்பது மட்டுமல்ல சிங்கள இனவாதிகள் எக்கச்சிகளை சேர்ந்தவர்கள் ஆயினும் ஆதரிப்பார்கள்.

மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! | Provincial Council Election Warning Signal Tamils

அதன்படி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியல் யாப்பில் இருந்து மாகாண சபை முறையை நீக்கி விடலாம். இதற்கு பொதுவாக்கெடுப்பில் ஆதரவை பெற வேண்டி ஏற்படும் நிலையில் அதற்கு பிரச்சினை இருக்காது.

ஏனெனில் தமிழருக்கு எதிரான முழுநாடு தழுவிய தேர்தலில் சிங்கள மக்கள் தமிழருக்கு எதிரான தமது இனவாதத்தின் பக்கமே வாக்களிப்பர்.

இதனை முன்கூட்டியே தமிழ் தலைமைகள் உணர்ந்து தமது புத்திகளை சற்று கூர்மையாக்கி கொண்டு மாகாண சபை தேர்தல் என்கின்ற விடயத்தில் ஜேவிபியினை வெற்றி பெறவிடாது செய்வதற்கான அரசியலை அவர்கள் முன்ஜோசனையுடன் முன்னெடுக்க வேண்டும். இங்கு இத்தகைய கட்டத்தில், இத்தகைய பின்னணியில் மாகாண சபை வேண்டுமா? வேண்டாமா? என்பதல்ல தமிழ் மக்கள் பக்கம் உள்ள கேள்வி.

ஜேவிபி வட மாகாணத்தில் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் தமிழ் மக்கள் தமக்கான சுயாட்சி அதிகாரங்களையும் விரும்பவில்லை, கேட்கவில்லை என்கின்ற ஒரு பிரகடனமே உள்நாட்டிலும் வெளிநாடுகள் முழுவதும் சிங்கள இனவாதிகளால் முன் வைக்கப்படும்.

இத்தகைய சிங்கள இனப்படுகொலை அரசியல்வாதிகள் மிகவும் புத்தி கூர்மையாக கடந்த காலம் முழுவதும் செயல்பட்டு உள்ளதை கருத்தில் கொண்டு தமிழ் தரப்பினர் இவ்விடயத்தை முன் முன்கூட்டிய அறிவுடன் கருத்தில் கொள்ளவேண்டும்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 12 July, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US