மாகாண சபைத் தேர்தலை நடத்த அநுர அரசு அஞ்சுகின்றது : சஜித் தரப்பு

National Peoples Party Tissa Attanayake Election Sri Lanka election updates
By Rakesh Sep 16, 2025 05:32 AM GMT
Report

மாகாண சபைத் தேர்தலைக் கண்டு அரசு எதற்காக அஞ்சுகின்றது? இந்தத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்குள்ள உண்மையான மக்கள் ஆணை என்ன என்பது வெளிப்படும். அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் போன்று மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசுக்கு நாம் அழுத்தம் பிரயோகிப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த அரசு ஊடகப் பிரசாரங்கள் மூலம் முன்னோக்கிச் செல்ல முயற்சிக்கின்றது. தேசிய மக்கள் கட்சி ஆட்சியேற்று ஓராண்டு நிறைவடைகின்றது. தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் அரசு எதனை நடைமுறைப்படுத்தியுள்ளது? வாக்குறுதிகளை ஒருபுறம் வைத்து விட்டு ஊடகப் பிரசாரங்களை முன்னெடுப்பதிலேயே அரசு அவதானம் செலுத்தி வருகின்றது.

அவற்றைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை அரசியல் பழிவாங்கல்களுக்கும் உட்படுத்துகின்றது. அரசு மாத்திரமின்றி நாடாளுமன்றத்திலும் சபாநாயகரது நடத்தைகளிலும் பிரச்சினையுள்ளது. நாடாளுமன்றத்தில் சபாநாயகர் என்பவர் சகல கட்சிகளுக்கும் பொதுவானவர்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த அநுர அரசு அஞ்சுகின்றது : சஜித் தரப்பு | Provincial Council Election Sri Lanka

அவரால் அனைத்து கட்சி உறுப்பினர்களும் சமமாகவே நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போதைய சபாநாயகரின் நடத்தையை அவதானிக்கும் போது நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா என்பதே சந்தேகத்துக்கிடமாகவுள்ளது. இது தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் வெளிநாட்டவர்களுக்கு நாட்டின் நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட வழங்கப்படாது எனக் கூறியவர்கள் இன்று முதலீடு என்ற போர்வையில் பல இடங்களை தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் அபிவிருத்திக்கு முதலீடுகள் அவசியமாகும் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

அதேவேளை, பொது இடங்களை அந்நியர்களுக்கு வழங்கும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றோம். ஜனாதிபதித் தேர்தலின் போது மின் கட்டணம் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க மிக அழகான கதைகளை மக்களிடம் கூறினார்.

மின் கட்டணங்களை மூன்றில் இடங்கு மடங்கால் குறைக்க முடியும் எனக் கூறினார். தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே அதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனக் கூறினார். ஆனால், இன்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அவர் கூறியபடி குறைக்கப்படவில்லை.

அத்தோடு அண்மையில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஊழல், மோசடிகளை ஒழித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கியதாகக் கூறிய அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

மாகாண சபைத் தேர்தலை நடத்த அநுர அரசு அஞ்சுகின்றது : சஜித் தரப்பு | Provincial Council Election Sri Lanka

இதற்காக அரசு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். தேசிய மக்கள் சக்தியைப் போன்று இதற்கு முன்னர் எந்தவொரு அரசும் மக்களை ஏமாற்றவில்லை. அதேபோன்றுதான் மாகாண சபைத் தேர்தல் விடயத்திலும் அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

மேலும் தாமதப்படுத்தாது வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த அரசுகளைப் போன்று இந்த அரசும் மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்த முயற்சித்தால் அது தவறாகும். மாகாண சபை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டியவையாகும்.

எனவே, ஆளுநர்களால் அவற்றைத் தொடர்ந்தும் ஆட்சி செய்ய அனுமதிக்க முடியாது. அவசர நிலைமைகளில் அவ்வாறு செய்ய முடியும். ஆனால், வருடக்கணக்கில் ஆளுநர் ஆட்சிக்கு இடமளிப்பது தவறாகும். எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றோம்.

மாகாண சபைத் தேர்தலைக் கண்டு அரசு எதற்காக அஞ்சுகின்றது? இந்தத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்குள்ள உண்மையான மக்கள் ஆணை வெளிப்படும். அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் போன்று மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசுக்கு நாம் அழுத்தம் பிரயோகிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US