மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை வழங்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (27.02.2026) மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில், மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இந்நிகழ்வில், இலங்கை நாடாளுமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கான குழுத் தலைவர் சுகத் வசந்த டி சில்வா, இணைத்தலைவர் பத்மநாதன் சத்தியமூர்த்தி, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, இலங்கை நாடாளுமன்றத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான குழுத் தலைவர் மேற்கொண்ட செயற்திட்டத்திற்கு அமைவாக, நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகளை ஆதரித்தல் மற்றும் விரிவான சட்டமன்ற கொள்கை சீர்திருத்தங்களை மேற்கொள்ளல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மாவட்ட மட்ட குழு அமைக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை
மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாடளாவிய ரீதியில் மூன்றாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் நேரடியாக கலந்துரையாடப்பட்டதுடன், அதுதொடர்பான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
தற்போது மட்டக்களப்பு மாவட்டம் இல் 9000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளதுடன், 14 மாற்றுத்திறனாளி சங்கங்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதநேய அடிப்படையில் சேவைகள் வழங்கப்பட வேண்டும்.
மனிதநேய சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதுடன், மாற்றுத்திறனாளிகள் பரீட்சைகளின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கல்வி அமைச்சுடன் கலந்துரையாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam