அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதில் சவால்! ரணில்
அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொடுப்பது பாரிய சவாலாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (17.01.2023) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், சற்று முன்னேற்றமடைந்து வருகின்றது. கடன் தொடர்பாக இந்தியாவுடனும் சீனாவுடனும் நாம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
விரைவில் இதற்கான பதில் கிடைக்கும் என நம்புகிறோம். மேலும், அரச ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் கொடுப்பதும் பாரிய சவாலாகவுள்ளது.
அரச ஊழியர்களுக்கு சம்பளம்
அதேநேரம், நாட்டின் தற்போது உணவுத்தட்டுப்பாடு இருக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது விவசாயிகளுக்கு உரங்களை வழங்கப்பட்டமையால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளோம்.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஒரு கிலோகிராம் நெல்லின் விலையை 100 ரூபாவாக்க வேண்டும். இதற்காக நாம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம்.
எனவே, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைந்து செயலாற்ற அழைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
