வவுனியாவில் தியாக தீபம் திலீபனுக்கு சிலை வைக்க இடம் தருமாறு கோரி்க்கை
தியாக தீபம் திலீபனுக்கு வவுனியாவில் சிலை வைப்பதற்கு இடம் தருமாறு வவுனியா வர்த்தகர் எஸ்.சிவரூபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த வர்த்தகர் இன்று (23) வவுனியா மாநகர முதல்வரிடம் கடிதம் ஒன்றினை சமர்ப்பித்து இந்தக் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழர்களுக்காக உன்னத இலட்சியத்திற்காக பல நாட்களாக பசி இருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் அண்ணாவுக்கு சிலை வைப்பதற்கு வவுனியாவில் இடம் ஒன்றினை ஒதுக்கித் தாருங்கள் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
கடிதத்தினை ஏற்றுக்கொண்ட வவுனியா மாநகர முதல்வர் சு. காண்டீபன், குறித்த சிலையினை வைப்பதற்கு இடம்கோரி தரப்பட்ட இந்தக் கடிதத்தினை மாநகர சபை அமர்வில் முன்வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்த கோரிக்கையை விடுக்கும் தாங்கள் வேறு சில நடைமுறைகளும் இருப்பதன் காரணமாக அதனையும் செயல்படுத்தி தமக்கு அந்த ஆவணங்களையும் பெற்றுத் தருமாறும் தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



